எங்கே எனது உறவுகள்… October 18, 2006
Posted by காற்றாடிக்கணவு in கணக்கு.2 comments
பல சந்தர்ப்பங்கள்… பல நேரங்கள்… பல கணங்கள்… சும்மா சும்மா ஆலாய் பறந்துகொண்டிருப்போம்… மிக கடினமான தருனங்களையும் கடந்து வந்திருப்போம்… உண்பதற்கு கூட நேரம் இருப்பது இல்லை… எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரிந்திருக்க ஞாயம் இல்லை…!!! எல்லோரும் மனிதர்கள் தானே…? சரி, என்னவோ கிறுக்க வேண்டும்னு நெனக்கிறேன்…
சில சமயங்களில் நினைப்பதுண்டு நான் யார், எங்கிருந்து வந்தேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன்… எங்கே போய்க்கொண்டிருக்கிறேன், எதற்காக போய்கொண்டிருக்கிறேன்… பல சமயங்களில் இதெல்லாம் மறந்துவிடும் மற்ற ஒட்டங்களில்… ஆம் எல்லோருக்கும் வரும் எண்ணங்கள்தான் இவை, யாரும் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட முடியாது என்பது பிறகுதான் புரிந்தது…
ஏதோ ஒரு தேடல் எல்லோரிடமும் எப்போதும் இருக்கும்… பொருள்… அறிவு…சந்தோஷம்… நிம்மதி… தனிமை… நட்பு… பெண்… ஆண்… உறவுகள்… எல்லா தேடல்களுமே இவற்றை சுற்றிதான் சுழன்றுகொண்டிருக்கும்… கடைசியில்… எல்லாம் துறந்து காணாமலே போய்விடுகிறோம்… எங்கே என்பது யாருக்கும் புரியாமல் இருக்கும் வெளிச்சம்…
சிலருக்கு தேடியது கிடைத்துவிடும்… சிலருக்கு ஏமாற்றம்… பலருக்கு தேடுவது ஒன்று கிடைப்பது ஒன்று… வந்ததை வைத்து என்ன செய்ய…? ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம் தான்… அந்த பலருக்கோ திண்டாட்டம் தான்…
ஆடிக்களைத்தவர்கள் பலர்… ஆடத்துடிப்பவர்களும் சிலர்… எல்லாம் உலக இன்பங்கள்… கண்டும் காணாமலும், திளைத்தும் திளைக்காமலும், நிஜமும் நிழலும்… ஆம் நம் உறவுகளிலும் தான்…


