அறிமுகம்
அது ஒரு பச்சைவிரித்த அழகான குட்டி கிராமம்… சேயாற்றங்கரையில் அமைந்து, 2 ஏரிகள், ஒரு குளம் எங்கள் கிராமத்தின் வனப்பை உயர்த்தும் சொத்துக்கள்… நகரத்தின் வடுக்கள் அதிகமாக படியாத மிதமான நாகரிகத்தின் சாயலுடன் ஒரு கிராமம்….
கிட்டி புள், கோலி, பம்பரமுமே பிரதான விளையாட்டுகள் இங்கே… இப்போது கிரிக்கெட்டும்…
பனங்காய் வண்டிகளும், பரண்கள்மேல் போடப்பட்ட தேய்ந்துபோன மிதிவண்டி சக்கரங்கள்தான் எங்கள் விளையாட்டு உபகரணங்கள்…
காலையில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் வந்து செல்லும் ஓட்டை உடைசலான அரசு பேருந்து மட்டுமே எங்கள் போக்குவரத்து…
ஊர் பொது மேடைதான் எங்கள் விவாத மையம்… ஐந்தாம் வகுப்புவரையேயுள்ள ஒற்றை வாத்தியார் பள்ளிக்கூடம்…
விவசாயிகளே பெரும்பான்மை இங்கே… ஒரு சில ஆசிரியர்கள், மிகச்சில இராணுவ வீரர்கள்… அவ்வளவே…
ரம்மியமான ஒரு ஆழமான அடித்தளம் அமைத்த வயல் கிராமம்… கோனையூர் பையனும் இதிலொரு அங்கம்…
என் இருப்பிடம் அறிய… —> கூகுள்_கோனையூர்
dai super da enna da kavithailam eluth poriya da…good keep it up
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,
மாணிக்க தமிழ் , வாழ்த்துகிறேன் உனது எழுத்துக்கள் மேலும் செழிக்க .
அன்புடன்
சிவக்குமார்