வேள்வித்தீ என்னும் ஒரு அனுபவ நிலை…!!! May 11, 2011
Posted by manicks in யாரோ.trackback
நீங்கள் எப்போதாவது “பொன்னியின் செல்வன்” என்ற நூலை படித்திருந்தால் தெரியும் வேள்வித்தீ என்றால் என்னவென்று… வேறு யாரேனும் அப்படி ஒரு நூலை அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை… அப்படியொரு பிரம்மாண்டம்… கற்பணையும் நிஜக்கதை போலவே சென்றுகொண்டிருக்கும்… அது அமரர் கல்கியின் தனித்துவம்… சரி, நம் கதைக்கு வருவோம்… அதென்ன வேள்வித்தீ???
நண்பனொருவன் கிட்டத்தட்ட மூன்று / நான்கு வருடங்களாக அவனுக்கேயுறிய ஒரு கணவினை நிஜமாக்க முயன்றுகொண்டிருக்கிறான்… அவனது அனுபவம், அவனது வாழ்க்கை முறை, அவனது கணவுகள் எல்லாமே அதற்காகவே அற்பணித்திருக்கிறான்… சில வருடங்களுக்கு முன்னர், இவன் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்… பிறகுதான் புரிந்தது அவன் எந்தளவுக்கு அதில் லயித்து வேலை செய்கிறான் என்று… ஒவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு உறக்கம் ஒவ்வொரு விழிப்பு அதற்காகவே சென்றுகொண்டிருக்கிறது…
அப்போதுதான் நமக்கு புரிந்தது வேள்வித்தீ என்பது என்னவென்று… அந்த அனுபவநிலையிலிருப்பது, அதொன்றும் அவ்வளவு சாதாரன விடயம் கிடையாதென்பது நன்கு தெளிப்பட்டது… அப்படிப்பட்ட பல வேள்வித்தீக்காரர்களுக்கெல்லாம் நம் வாழ்த்துக்கள்…
பாரதி பாடியிருக்கிறார்…
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ ?
அன்றய பாரதியின் உக்கிரம் வார்த்தைகளில்தான் புரிந்துகொள்ள முடிகின்றது… இன்றய பாரதிகளும் அவரைப்போலே உக்கிரத்துடன் முயன்றுகொண்டுதானிருக்கிறார்கள்… வேள்வித்தீதான்… வளமான இந்தியாவை வார்க்கும் பாரதிகளுக்கெல்லாம் ஒரு ‘ஓ’….

Comments»
No comments yet — be the first.