ஒரு திருப்புமுனை… May 10, 2011
Posted by manicks in யாரோ.trackback
ஓவ்வொருவரின் வசந்தகாலம் என்றால் பெரும்பாலானோருக்கு அவரவர்களின் பிள்ளைப்பிராயம்தான் நினைவிற்கு வரும்…!!! அதென்ன அப்போது அவ்வளவு அருமையான விடயம் ? அப்போது அவர்கள் பெரிதாக ஏதாவது சாதித்திருந்ததுண்டா? ஒன்றும் இருந்ததில்லை… சட்டையின் பொத்தானைக்கூட சரியாக பொருத்திக்கொள்ளத்தெரியாத வேளைகள் அது… ஒழிந்துகொண்டிருக்கும் மூக்கு… எதிர்த்தவீட்டு பையன் சாப்பிடும் குச்சி மிட்டாய்க்காக பார்த்து ஏங்கும் மனசு… “நரிக்கும்”, “ணரிக்கும்” கூட வித்தியாசம் தெரியாமல் ஆசிரியையிடம் குட்டு வாங்கும் வயசு… பள்ளியின் ஒருமாத கோடை விடுமுறைக்காக ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்… ஏதும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் விடயமாக இல்லாமலிருந்தாலும் அந்த நினைவுகளை அசைபோடும்போது வரும் ஆனந்தமே, ஒரு அலாதி ஆனந்தம்…
அப்படி இருந்த நாம் இப்போது இப்படி… எப்படி? இதெல்லாம் எப்போது மாறியது? உங்களுக்கே தெரியும் எப்படி இப்படி படிப்படியாக மாறினோம் என்று… அதென்ன இப்போதெல்லாம் அப்படி ஒரு இருக்கம் மனதிற்குள், என்ன குடியா மூழ்கிப்போனது… ஐ போன், குட்டி கணினி, 150 சி சி வண்டி, 4 வங்கி கணக்குகள் இதெல்லாம் இருந்தும் எங்கோ உள்ளே அறுந்துபோனதுபோல ஒரு இருக்கம்…

மீண்டும் கருப்பு வெள்ளை காலத்திற்கு போவதென்னவோ இயலாத காரியம்… ஆனால இப்போது ஒன்றும் அவ்வளவு மோசமான நிலை ஒன்றும் இல்லை… எல்லா பருவங்களும், பருவங்களில் வரும் நினைவுகளிலும் உள்ள குழந்தைத்தனமும் நாம் கண்டுகொள்ளாத ஒன்று… காலங்காலமாக புரியாத ஊரரிந்த இரகசியமாக இது இருந்து வருகிறது…
சின்னச்சின்ன சந்தோசங்களை கண்டுகொண்டாலே அதோ அந்த ஒரு புன்னகைதான்… வானத்தில் பறப்பதால் வந்ததன்று அது… இதுவும் திருப்புமுனைதான்… ஆனால் நாம் வேறு திருப்புமுனையை நோக்கி…
Comments»
No comments yet — be the first.