ஒரு வேளை – மனிதர்கள்… May 1, 2011
Posted by manicks in யாரோ.trackback
ஏனோ மனது லயமில்லாமலே சென்றுகொண்டிருக்கிறது… யாவற்றையும் திசைதிருப்பி ஒருங்குபடுத்திவிடலாம் என்று எத்தணித்துதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்… ஆனால் நடப்பதோ வேறு… வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிவிடாதே என்று யார்யாருக்கோ சொல்லியிருக்கிறேன்… எனக்கே… அனுபவம்தான்…
வான்மழை பரிகாரம் கேட்டால் என்ன நாம் செய்துவிட முடியும்… அது ஒரு தனிப்பட்ட கதை… ஏதேதோ சரத்தில்லாத ஒருமையுடன் போய்க்கொண்டிருக்கிறது… கண்ணசைவிலும் கையசைவிலும் சில மனிதர்கள் ஒத்துபோகிறார்கள்… இங்கு நிலைமை வேறு… பரிவு, பக்குவம், முரணில்லா பயன்பாடு – அதெல்லாம் சாதாரனமாக வந்துவிடாதோ… அதற்குத்தான் எத்தனித்திருந்தேன்… சோம்பிப்போனதுதான் மிச்சம்…!!! அவர்களின் எண்ண வெளிப்பாடு வறுத்தெடுக்கிறது… என்னதான் வேண்டும் கடைசியில் – யாமறியேன் பராபரமே, என்றதுதான் மிச்சம்… பின் எதற்காக இந்த அலட்டல்… அதுவும் தெரியாது… சிரிப்பதா அல்லது… …
ஏதோ ஒன்று பல்கலைகழகம் என்று எண்ணி அதை கட்டுக்கோப்பாக்க முயற்சித்தேன்… அதொன்றும் அவ்வளவு சுலபமானதாக தெரியவில்லை… ஒவ்வொன்றும் ஒரு இரகம்… தானாய் விடிந்தால்தான் உண்டு – விளங்காத மனிதர்கள்… நான் பயணிக்கும் திசை வேறு, அவர்களின் திசை வேறு… விடியலே இல்லாத இரவுகளாய் உறங்கிக்கொண்டிருக்கிற உலகம்… ஆஹா… அப்படியென்ன… அதொன்றும் கானொளியில் 3 மணி நேர படமில்லை விளக்கிட (அ) விளங்கிட…
இதுவும் ஒருநாள் மலரத்தான் செய்கிறது…!!! மலரும், என்ற எண்ணங்களுடன்… !!!

I too………..
Thanks,
Mohan