நிலாச்சூரியன்… !? October 26, 2006
Posted by manicks in நான்.trackback
ஒரு வேளை நான் கணவு கண்டுகொண்டிருந்தேனா தெரியவில்லை… முற்றிலும் இருட்டு, கரகரவென ஏதோ சத்தம்… என்னவோ எங்கோ ஊளையிடும் சத்தம்… தவளைகளின் டர்டர் என சத்தம்… கருப்பு ஒவியங்களின் அசைவுகள்… சின்ன சின்னதாய் மின்னும் வின்மீன்கள்… தொலைவில் சின்னதாய் வண்டியின் ஒலிபெருக்கியின் சப்தம்…
திடீரென காலில் சில்லென்ற உணர்வு… உற்றுப்பார்த்தால் கீழே தண்ணீர்… அப்போதுதான் தெரிந்தது நான் ஆற்றுக்குள் நடந்துகொண்டிருக்கிறேன் என்று… கையில் உள்ள கைவிளக்கை ஒளிர்வித்தேன்… பளீரென வெளிச்சம்… அப்பப்பா… என்னமோ வெள்ளி பாதுகைகள் கொட்டி வைத்ததுபோல சின்னஞ்சிறு கெண்டை மீன்கள் தண்ணீரில் துள்ளிக் கொண்டிருந்தன… அவைகள் தூங்கவில்லை போலும்… அவை எப்போது தூங்கும் என்ற கேள்வி எனக்குள்…
மேலும் நடந்தேன்… தண்ணீரில் நனைந்த மணல் சர் சர் என்ற ஒசையை என் காலடியில் எழுப்பிக் கொண்டிருந்தன… எனக்கே பயமாகத்தான் இருந்தது அந்த ஓசை… என்னமோ ஒரு அசட்டு தைரியத்துடன் நடந்து கொண்டிருந்தேன், சில்லென்ற சலனத்துடன் செல்லும் தண்ணீரினுள் இறங்கிவிட்டேன்… அரை பாகமுள்ள நிலவு தண்ணீரில் அலைந்தது வேகமாக… மேகத்தின் மூடல்களால் அதனால் சரியான வெளிச்சத்தை தர முடியவில்லை என்று மேலே பார்த்த போது தெரிந்து கொண்டேன்…
ஏதோ ஒரு கொக்கு வேகமாக பறந்து சென்று பக்கதில் உள்ள சவுக்கு தோப்பிற்குள் மறைந்தது… அடித்தொண்டையினுள் ஒரு பயம்… முருகா முருகா என வேண்டுதல் வேறு…
“யார்ராது இந்த நேரத்துல, எங்க போற” என்ற குரலோடு என் முகத்தில் கைவிளக்கை அடித்தார் பால்கார முத்து அண்ணன்… என் முகத்தை பார்த்த்தும், “ஏண்டா கண்ணா அப்பாட்ட சொல்லி ஒரு சைக்கிள் வாங்கி தர சொல்ல கூடாதா… தெனம் இப்படி நாலு மைல் வெடிகாத்தால நடந்து போய் அப்புறம் எப்படி ட்யூஷன் படிப்ப…!??” என்று சொல்லிக்கொண்டே ஊருக்குள் சைக்கிளை விரட்டினார்…
“எங்க ஊர்லருந்து சிலருக்கு ஸ்கூல் போகவே வழி இல்ல… ஏதோ நான் குடுத்து வச்ச பையன்றதால எங்கப்பா என்ன ட்யூஷன் படிக்க சேத்துவிட்டிருக்கிறார்… சைக்கிள் வேணும்னு கேட்டு இதையும் கெடுத்துக்க சொல்றீங்களா…” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டது அவருக்கு கேட்டிருக்க ஞாயம் இல்லை…
கொஞ்சமாக கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது… எனது நடை வேகப்படுத்தினேன் 6 மணிக்கெல்லாம் போகலனா யாரு வாத்தியார்ட்ட திட்டு வாங்குறது என்று 4:30 மணிக்கு எழுந்து 5 மணிக்கெல்லாம் பக்கத்து ஊரில் உள்ள என் பள்ளிக்கு கிளம்பிவிட்டிருந்தேன்… சற்றைக்கெல்லாம் சூரியன் தலை தூக்க ஆரம்பித்துவிட்டான்…
அட இது என்ன இந்த பக்கம் சூரியன் இருக்கு… அந்த பக்கம் நிலா இருக்கு…???!!! சரியாக இது இரவா ? பகலா ? என்ற யோசனை… சின்ன சந்தேகம்…? அந்த சந்தேகம் இன்று வரை தீரவில்லை அது வேறு விஷயம்… அந்த நிலாவும் சூரியனும் ஒரே நேரத்தில் தெரியும் ஏராளமான தருணங்களை… நான் கடந்த அந்த இனிமையான தனிமை வேளைகளை இப்போது நினைத்து பார்க்கும் போது அடடா, திரும்பவும் 6 ம் வகுப்பு படிக்க ஆசையாக இருக்கிறது…
நிலாச்சூரியனை அன்று ரசிக்கவில்லை நேரில், இன்று ரசிக்கிறேன் Desk top photo ல் பார்த்து…
அட மாணிக்கம், அருமையாக எழுதுகின்றாய். எங்கே ஒளித்து வைத்திருந்தாய் இத்தனை திறமையை?
முதல் படைப்பு போன்றே தெரியவில்லை. சிறப்பாக உள்ளது.
எழுத எழுத பக்குவப்பவப்படுவாய்…
வாழ்த்துக்கள்..
மாணிக்கம்.. விழியன கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் கேட்க நினைத்தேன்.
புது ஊரு(புனே) !புது வேலை! புது சம்பளம்! புது பரிணாமம்!
கலக்குறே மாணிக்கம்!
வாழ்த்துக்கள் மாணிக்கம்!
Hi konaiyur paiya….
i cant read this blog.. pls make some arrangements or change ur fonts that will be suppported by all OS & Browsers..
looking forward to read this blog…
Very interesting……………………..
WOW!
Good experience,more than that nicely narrated.
Congrats! Buddy!