jump to navigation

நேர்த்தியற்றவைகளின் அழகியல்… August 9, 2011

Posted by manicks in யாரோ.
1 comment so far

நாமெல்லாம் அழகாக அடியெடுத்து வைக்கவே நினைக்கிறோம்…  நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிடவே விரும்புகிறோம்… அழகாக உடையுடுத்தவே விரும்புகிறோம்… முழுநிலவிலே பரவசமடைகிறோம்… நாம் நம்மை அழகாக, குறைகளே இல்லாமல்  வெளிப்படுத்தவே விரும்புகிறோம்… முழு பழமும் உண்பதில் அலாதி ஆனந்தமடைகிறோம்…

ம்ம்… நம் வீட்டு செல்ல பெண், அவளின் ஒற்றைக்காலில் நம் பெரிய செருப்பை மாட்டிக்கொண்டு தரையில் தேய்த்து தேய்த்து நடக்கும்போது, ஆஹா அதென்னவோ ஒரு ஆனந்தம் நமக்குள்ளே…  நம் சின்னப்பெண் தத்தி தத்தி நடப்பதை நாம் பார்த்து புளங்காகிதம் அடைகிறோம்…

நன்று… நேர்த்தியற்றவைகளின் அழகியலுக்கும் மேலே சொன்னவைகளுக்கும் என்ன சம்பந்தம்?

நண்பன் ஒருவனுடன் பயணத்தில் இருக்கும்போது, குறைகளையே பெரும்பாலும் நான் சுட்டிக்காட்டிக்கொண்டிருன்தேன்… அப்போதுதான் நண்பன் மூலமாக “Wabi-sabi” என்கிற விஷயத்தை பற்றி கேள்விபட்டேன்… “Wabi-sabi” என்ற ஜப்பானிய வார்த்தைக்கு  “நேர்த்தியற்றவைகளின் அழகியல்” என்று மொழியாக்கம் செய்து கொண்டேன்.
சரியாக முடிக்கப்படாத வேலை, நிரந்தரமில்லாத ஒரு விஷயம், நேர்த்தி இல்லாமல் செய்த ஒரு பொருள் – இதெல்லாம் வாபி-சாபி யின் அர்த்தங்கள். சில விஷயங்களை செய்யும்போது வேண்டுமென்றே அப்படி செய்வது அவர்களின் வழக்கமாம். ஏனெனில், நாம் முழுமையான ஒரு விஷயத்திற்குதான் நாம் மதிப்பளிக்கிறோம்… உளவியல் ரீதியாக முழுமைகளுக்கே நாம் ஆட்பட்டுவிடுகிறோம்… அரைகுறைகளை நாம் சட்டை செய்வதில்லை… கோணலாக வைத்த கதவு, மொட்டையான ஒரு ஜாடி, பொத்தான் இல்லாத சட்டை – இவைகளுடன் நாம் பழகும்போது, நமக்கே அடுத்தவர்களின் குறைகள் பெரிதாக தெரியாமல் போய்விடுமாம்… “The  Perfect ” என்ற ஒன்று எப்போதுமில்லை, ஆனால் அதை நோக்கி செல்லும்போது அரைகுறைகள் மதிப்பிலாமல் போவது இயல்பே…

ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்துதான் இந்த அழகான உலகம் இயங்கிகொண்டிருப்பதால், அந்த அரைகுறைகளுக்கும் ஜப்பானியர்கள் மதிப்பளிப்பார்களாம்… இந்த ஒரு உளவியல் காரணமே அவர்களின் மற்ற விஷயங்களும் தானாகவே நேர்த்தியாக இருப்பதற்கு வழிகோலுகிறது… அரைகுரையாகிப்போனாலும் கஷ்டமில்லைதானே…

 

நல்ல ஒரு விஷயம், தெயளிவாகியது… அரை குறை விஷயங்களை பெரிதுபடுத்துவதில்லை இப்போதெல்லாம் (சுய மரியாதையை தவிர )…

 

வேள்வித்தீ என்னும் ஒரு அனுபவ நிலை…!!! May 11, 2011

Posted by manicks in யாரோ.
add a comment

நீங்கள் எப்போதாவது “பொன்னியின் செல்வன்”  என்ற நூலை படித்திருந்தால் தெரியும் வேள்வித்தீ என்றால் என்னவென்று… வேறு யாரேனும் அப்படி ஒரு நூலை அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை… அப்படியொரு பிரம்மாண்டம்… கற்பணையும் நிஜக்கதை போலவே சென்றுகொண்டிருக்கும்… அது அமரர் கல்கியின் தனித்துவம்… சரி, நம் கதைக்கு வருவோம்… அதென்ன வேள்வித்தீ???

நண்பனொருவன் கிட்டத்தட்ட மூன்று / நான்கு வருடங்களாக அவனுக்கேயுறிய ஒரு கணவினை நிஜமாக்க முயன்றுகொண்டிருக்கிறான்… அவனது அனுபவம், அவனது வாழ்க்கை முறை, அவனது கணவுகள் எல்லாமே அதற்காகவே அற்பணித்திருக்கிறான்… சில வருடங்களுக்கு முன்னர், இவன் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்… பிறகுதான் புரிந்தது அவன் எந்தளவுக்கு அதில் லயித்து வேலை செய்கிறான் என்று… ஒவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு உறக்கம் ஒவ்வொரு விழிப்பு அதற்காகவே சென்றுகொண்டிருக்கிறது…

அப்போதுதான் நமக்கு புரிந்தது வேள்வித்தீ என்பது என்னவென்று… அந்த அனுபவநிலையிலிருப்பது, அதொன்றும் அவ்வளவு சாதாரன விடயம் கிடையாதென்பது நன்கு தெளிப்பட்டது… அப்படிப்பட்ட பல வேள்வித்தீக்காரர்களுக்கெல்லாம் நம் வாழ்த்துக்கள்…


பாரதி பாடியிருக்கிறார்…

தேடிச் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ ?

அன்றய பாரதியின் உக்கிரம் வார்த்தைகளில்தான் புரிந்துகொள்ள முடிகின்றது… இன்றய பாரதிகளும் அவரைப்போலே உக்கிரத்துடன் முயன்றுகொண்டுதானிருக்கிறார்கள்… வேள்வித்தீதான்… வளமான இந்தியாவை வார்க்கும் பாரதிகளுக்கெல்லாம் ஒரு ‘ஓ’….

Follow

Get every new post delivered to your Inbox.